செறிவடையும் இந்தியா-ஆசியான் உறவுகளைக் கருத்துக்குவி தளத்தின் வாயிலாகப் புரிந்துகொள்ளல்
25.08.2020 ஆங்கிலக் கட்டுரை : http://airworldservice.org/english/archives/102619
(கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பற்றிய மூலோபாய ஆய்வாளர் முனைவர் டிட்லி பாசு எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் த.க.தமிழ் பாரதன்)
இந்தியாவின் ‘ஆக்ட் ஈஸ்ட்’ கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் கண்ணோட்டத்தை மேம்படுத்துதல் தொடர்பான ஆசியான்-இந்தியா கருத்துக்குவி தளம் (ஏஐஎன்டிடி) ஆறாவது வட்டமேசை கூட்டம் கடந்த வாரம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த ஆண்டின் விவாதம் “ஆசியான்-இந்தியா: கோவிட் பிந்தைய சகாப்தத்தில் கூட்டாட்சியை வலுப்படுத்துதல்” என்பதில் கவனம் செலுத்தியது. ஏஐஎன்டிடி 2009ஆம் ஆண்டில் இந்தியாவால் கருத்தாக்கம் செய்யப்பட்டது. அறிவு இடைவெளியை நிவர்த்தி செய்வதன் மூலமும், ஒத்துழைப்புக்கான சாத்தியமான துறைகள் குறித்த கொள்கைப் பரிந்துரைகளை வழங்குவதன் மூலமும் ஆசியான்-இந்தியா மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் முனைவர் எஸ். ஜெய்சங்கர், துணை பிரதமரும் தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சருமான டான் பிரமுத்வினாய் மற்றும் ஆசியான் பொதுச்செயலாளர் டத்தோ லிம் ஜாக் ஹோய் ஆகியோர் இந்த ஆண்டு வட்டமேசை கூட்டத்தில் பங்கேற்றனர்.
நோய்த்தொற்று ஒருபுறம் சர்வதேச அரசியலில் ஆழ்ந்த போட்டியையும் மறுபுறம் பன்முகத்தன்மையும் வலியுறுத்தியுள்ளது என்று முனைவர் ஜெய்சங்கர் விளக்கினார். கோவிட்-19 உலக ஒழுங்கை எவ்வாறு வடிவமைக்கும் என்பது முதன்மைக் கேள்விகளில் ஒன்றாகும். இந்தியாவும் தென்கிழக்கு ஆசியாவும் உலகமயமாக்கலில் இருதரப்பு ஆர்வத்தைக் கொண்டுள்ளன. உலகளாவிய பொருளாதாரத்திற்கு கோவிட்-19 நோய்த்தொற்றால் முன்வைக்கப்பட்ட முன்னிகழ்ந்திராத சவால்களை வெளியுறவு அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மதிப்பிடப்பட்ட இழப்பு 5.8-8.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6.5-9.7 விழுக்காடு வரை இருக்கலாம். இத்தகைய சவால் “கூட்டுத் தீர்வுகள்” என்று அழைக்கப்படுகிறது.
உலகப் பொருளாதாரத்தில் உள்ளார்ந்த அபாயங்கள், தொடர் பின்னடைவு மற்றும் பன்முகத்தன்மை தொடர்பானவற்றுக்கு கோவிட்-19 முக்கியத்துவம் அளித்துள்ளது. பொருளாதாரப் பாதுகாப்பு என்பது வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய தேசிய பாதுகாப்பின் முக்கிய அங்கமாகும். முனைவர் ஜெய்சங்கர் மேலும் கூறுகையில், இச்சூழலில் உலகளாவிய விநியோகத் தொடரில் மூலோபாய சுயாட்சி என்ற கருத்து முக்கியமானது என்றும், பரந்த மறுசீரமைப்போடு சமமான உலகத்தை உருவாக்குவது அவசியம் என்றும் கூறினார். நலனை அபாயமாக்காமல் இருப்பதும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்குவதும் முன்னுரிமையானவை. தலையிடாக்கொள்கை அல்லது பாதுகாப்புவாதத்தினைக் காத்துக்கோடல் தன்னம்பிக்கை இந்தியாவின் நோக்கம் அல்ல. ஆனால் “தன்னம்பிக்கை இந்தியா உலகிற்கு இன்னும் அதிகம் வழங்கவுள்ளது” என்பதை அது வலியுறுத்துகிறது. கோவிட்19க்குப் பிறகான உலகில் ஆசியானும் இந்தியாவும் சக்திவாய்ந்த பொருளாதார சக்திகளாக ஆசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும்.
துணை பிரதமரும் தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சருமான டான் பிரமுத்வினாய், ஆசியான்-இந்தியா மூலோபாய கூட்டுறவில் “பகிர்வின் மதிப்பை” அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளிட்ட விநியோகத் தொடர், பிராந்திய இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட ஒத்துழைப்பின் ஐந்து முக்கியத் துறைகளை அவர் பரிந்துரைத்தார்; மனித மூலதன வளர்ச்சி; பிராந்தியவாதம் மற்றும் துணை பிராந்திய ஒத்துழைப்பு, சான்றாக, அய்யேவடி-சோப்ராயா-மீகாங் பொருளாதார ஒத்துழைப்பு உத்தி (ஏசிஎம்இசிஎஸ்) மற்றும் மீகாங்-கங்கா ஒத்துழைப்பு (எம்ஜிசி); கடல் சூழல் மற்றும் பேரழிவு மேலாண்மை; வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு முதலானவை.
ஏஐஎன்டிடி-இன் இந்த நிகழ்வு காணொளி வாயிலாக நிகழ்ந்தது என்றாலும், கடைசி ஐந்து வட்டமேசை கூட்டங்கள் புது தில்லி, வியஞ்சான், ஹனோய், கோலாலம்பூர் மற்றும் ஜகார்த்தாவில் நடத்தப்பட்டன. ஏஐஎன்டிடி-இன் இந்த நிகழ்வை இந்திய வெளியுறவு அமைச்சகம், தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சகம், வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு (ஆர்ஐஎஸ்), ஆசியான் ஆய்வு மையம் (ஏஎஸ்சி) மற்றும் சுலலாங்கொர்ன் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்தன. கலந்துரையாடலின் முக்கிய கருப்பொருள்கள் பின்வருமாறு: “கோவிட்-19 சகாப்தத்தில் உலகளாவிய நிலப்பரப்பு ஒழுங்கு மாற்றம் மற்றும் ஆசியான்-இந்தியா உறவுகள்”; “வளர்ந்து வரும் மதிப்புத் தொடர்கள்: கோவிட்-19 சகாப்தத்தில் ஆசியான் மற்றும் இந்தியாவுக்கான வாய்ப்புகள்”; “நான்காவது தொழில்துறை புரட்சியில் (4ஐஆர்) ஆசியான்-இந்தியா கூட்டாண்மையைப் புதிய இயல்புடன் ஊக்குவித்தல்”; “இந்தோ-பசிபிக் மீதான ஆசியான் கண்ணோட்டம் (ஏஓஐபி) மற்றும் இந்தோ-பசிபிக் பெருங்கடல் முயற்சி (ஐபிஓஐ)”: “முழுமையாக்கல் மற்றும் ஒத்துழைப்பு; ஆசியான்-இந்தியா உறவுகளுக்கான முன்னோக்குவழி”.
இந்தியாவின் கிழக்கு சட்டக் கொள்கையின் முக்கியத் தூணாக தென்கிழக்கு ஆசியா உள்ளது. இலவச, திறந்த, உள்ளடக்கிய, விதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்தோ-பசிபிக் அமைப்பைப் பெறுவதில் இருதரப்பு ஆர்வம் உள்ளது. இந்தியாவில் ஆசியான் மையநிலை மற்றும் இந்தோ-பசிபிக் தொடர்பான ஆசியானின் அணுகுமுறை போன்ற பொதுவான கொள்கைகளுடன் ஒன்றிணைவு உள்ளது மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு, இயற்பியல் மற்றும் டிஜிட்டல் இணைப்பு, நீலப் பொருளாதாரம் மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றை மேம்படுத்த இரு தரப்பினரும் அயராது உழைத்து வருகின்றனர். தென்கிழக்கு ஆசியாவுடனான இந்தியாவின் மூலோபாய ஈடுபாடு வணிகம், இணைப்பு மற்றும் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. மேலும், ஆசியான்-இந்தியா மூலோபாய கூட்டாண்மையைப் புதிய உயரங்களுக்கு உயர்த்தும் நோக்கத்துடன் இந்தியா தொடர்ந்து ஆசியானில் முதலீடு செய்யும்.
நன்றி : அகில இந்திய வானொலி, திரைகாடல் ஆடிவரும் தமிழ்நாதம்
No Comments