எந்நாளும் ஒளிர்பிறை அறிவழகன்

RIP _/\_ 

பேராசிரியர்

எந்நாளும் ஒளிர் பிறை அறிவழகன்

தற்போது எப்படி விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்களோஅது போல 2000ஆம் ஆண்டில் தகவல்பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக 300 க்கு மேற்பட்டவர்களை வைத்து டெல்லியில் தொடர் உண்ணாவிரதம் நடத்திய பெருமைக்கு உரியவர் பிறை அறிவழகன். ஏனென்றால் அதன் நீட்சிதான் 2005ல் தகவல்பெறும் உரிமைச்சட்டம் வரக் காரணமாக இருந்தது.

வயதான சமூக செயற்பாட்டாளர்களில் கேசிக்கு (http://tamilbharathan.blogspot.in/2015/07/blog-post_31.html) அடுத்து யாரும் என்னுடன் அதிகம் நெருக்கம் காட்டியதில்லை., அறிவியல் இயக்கம் எப்படி என் வாழ்வின் உயர்நிலைக் கல்வியோடு பெரும்பாலும் உறவாடியதோஅதே போன்றே குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் உறவும்.

அறிவியல் இயக்கம் கூட பிற்காலத்தில் தான் என் பங்கேற்புக்கு வழிகோலியதுஆனால்குடிமக்கள் நுகர்வோர் மன்றம் உயர்நிலைக் கல்வி பயிலும் போதே என்னை பங்கேற்கச் செய்தது,. ஈடுபட வைத்தது., சமூக விழிப்பிற்கான என் விழிப்பைத் தூண்டிவிட்டது.

அதற்கெல்லாம் அத்தியாவசியக் காரணம் பிறை சார் பிறை.அறிவழகன்சிலருக்கு இயற்கையில் அமையும் பெயர்களைக்கண்டு வியந்ததுண்டுஅந்தவகையில் இந்தப் பெயரும் ஒன்றுமனிதர் எனது பத்தாம் வகுப்பு பால்யப் பருவத்திற்குள்ளே பல பயிற்சிகளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்கச் செய்தார். பள்ளிப் பருவத்திலே நான் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் செயலர் என நினைவு கொஞ்சம் இருக்கின்றது.

 

In School Days memories with Prof Pirai.Arivazhagan

 

9ஆம் வகுப்பும் 11ஆம் வகுப்பும் தான் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தில் அதிகம் பங்கெடுக்க முடியும். 12ஆம் வகுப்பு முடிந்தபிறகும் கூட என்னைத் தொடர்ந்து இயங்க வைத்தார்மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் இணைத்தார்.

திரு.வி.க. கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர்,
கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதை கல்லூரியின் கால்பதித்த சில நாட்களுக்குப் பின்னரே அறிந்து கொண்டேன். பின் அவரது இல்லத்தின் முதல்மாடியில் நிகழும் கலந்தாய்வு கூட்டங்கள் பலவற்றிலும் கலந்து கொண்ட அனுபவம் ஓர் இயக்கத்தை வழி நடத்துவதற்கான அனுபவங்களை வாரி இறைத்தது.

ஒரு நாள் திரு.வி.க கல்லூரிக்கு செல்லத் தயாரான சமயம்அழைப்பில் தொடர்ந்து இணைந்திருந்தார்., இன்றைக்கு வேதாரண்யம் செல்ல வேண்டும் வரலாமாஅயோடின் உப்பு பற்றிய திட்ட வகுப்பு, அதன் நிறை குறை அத்தியாவசியத் தேவை பற்றிய ஒரு நாள் அரங்கு மற்றும் நேரடிக் களப்பணியும் நிகழ்ந்திருந்தது.

நேரடியாக உப்பளங்களில் ஆராய்ச்சியும் அதன் பின் எப்படி அயோடின் கலக்கிறார்கள் என்பதையும் காண்பதற்கானக் களத்தை வடிவமைத்திருந்தார்அதன் பின் தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட உப்புப் பொட்டலங்கள் முழுவதும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு திருவாரூர் வந்தோம்.

அதன் பின் திருவாரூரில் ஒரு முறை அயோடின் உப்பு தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் நிகழ அவரின் நெடுநாள் ஆசையை நான் விகடனில் கட்டுரையாக வெளியிட்டேன் (http://www.vikatan.com/news/tamilnadu/47176.html). பின் அயோடின் குறித்த பல்வேறு தகவல்களைத் திரட்டத் தொடங்கி அதில் மிகப்பெரிய அறிவு மாறுதல்கள் ஏற்பட்டன.

நுகர்வோர் மன்றங்களில் போட்டிகளில் கலந்து கொண்ட நான் பின்னாளில் அந்தப் போட்டிகளுக்கே நடுவர் பொறுப்பையும் ஏற்றிருந்தேன்திருத்துறைப்பூண்டியில் 2015 மேமாதம் ஏற்ற அப்பொறுப்பே நான் ஏற்றுக்கொண்ட போட்டிக்களுக்கான முதல் நடுவர் பொறுப்பும் கூட.

தற்போது எப்படி விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்களோஅது போல 2000ஆம் ஆண்டில் தகவல்பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக 300 க்கு மேற்பட்டவர்களை வைத்து டெல்லியில் தொடர் உண்ணாவிரதம் நடத்திய பெருமைக்கு உரியவர் பிறை அறிவழகன். ஏனென்றால் அதன் நீட்சிதான் 2005ல் தகவல்பெறும் உரிமைச்சட்டம் வரக் காரணமாக இருந்தது.

 

In College Days Memories with Prof Pirai.Arivazhagan


திருவாரூர் பகுதியில் 
20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நுகர்வோர் மன்றத்தைத் துவங்கி தமிழகத்திற்கே முன்னோடியாகத் திகழ்ந்தவர்திருவாரூரின் மக்கள் பிரச்சினைகளை மனதில் கொண்டு அதனை ஒவ்வொரு மாதமும் ஆராய்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்துரைத்து தீர்வுகாண வழிகோலிய இயக்கத்தின் தலைவரவர்.

நெல் ஜெயராமன்நுகர்வோர் ரமேஷ்சுபாஷ் காந்திமுத்துக்குமார்என்னையும் சேர்த்து பலரது பரிமாணங்களை உருவாக்கிய தகையவர்.


திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்று சூழல் அமைப்பின் தலைவராக தன் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை இருந்தவர் பிறை சார்.


நுகர்வோர் இயக்கங்களின் கூட்டமைப்பின் (FETCOT) மாநில பெருந்தலைவராகவும் செயல்பட்ட பேராசிரியர் அவர்கள் உடல்நிலை சரியின்மை காரணமாக இப்பூவுலகிலிருந்து துஞ்சினார்.

அவரது இறுதிசடங்கு மாலை மணிக்கு திருவாரூர் சிவம் நகர் அவர் இல்லத்திலிருந்து புறப்படுகிறதாம்நம்ப முடியவில்லை இந்த மாதம் நுகர்வோர் கூட்டத்திற்குச் செல்லமுடியவில்லைசென்ற மாதமே தளர்ந்த உடலோடு மோசஸ் பள்ளியில் நிகழ்ந்த மாதக் கூட்டத்திற்கு வந்திருந்தார்அந்தக் கூட்டத்தில் கூட உடல் சுகமின்மையாக இருக்கும் நெல் ஜெயராமன் அவர்களுக்கு நிதிதிரட்டல் பணி மேற்கொள்ள வழிவகை செய்திருந்தார்.

இன்றைய தினம் அவர் இல்லையென்று சொன்னாலும்நுகர்வோர் உரிமை நிலை நாட்டுகிற ஒவ்வொரு நாளும் அவர் உயிர்ப்புடனே இருந்து கொண்டிருப்பார்.

எந்நாளும் ஒளிர் பிறை அறிவழகன்

 

த.க.தமிழ் பாரதன்

(பேராசிரியர் பிறை அறிவழகன் மறைவின் அஞ்சலிக்காக எழுதப்பட்டது)
திருவாரூர்

24.04.2017