2017 நவம்பர் மாதத்தில் இலங்கைக்குப் பயணப்பட்டேன். நான்கு நாட்கள் பயணித்துத் திரும்பிய அனுபவங்கள் படைப்பு குழுமத்தின் தகவு மின்னிதழில் “ஈரிருநாள் இலங்கை” எனும் தலைப்பில் தொடராக வெளியானது. மொத்தம் ஏழு மாதங்கள் வந்த தொடரைத் தொகுத்து நூலாக வெளியிடலாமே என்ற சிலரது விழைவு தற்போது நிறைவேறி இருக்கிறது.
இதுவரை கண்டிராத ஒரு நாட்டில் சென்றது, நடந்தது, உண்டது, பேசியது, கற்றது, பெற்றது என்பனவற்றை இந்நூலில் ஆவணப்படுத்தியுள்ளேன். முதுகலை பயின்ற மாணவனின் பார்வையில் அயல்நாட்டில் நான்கு நாட்கள் எப்படி உணரப்பட்டன என்பதை இந்நூல் அறிவிக்கும். ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து, இந்தியப் பிரதிநிதியாக பன்னாட்டு அரங்கில் பங்கெடுத்ததன் வெளிப்பாடு இது. நீளும் கோட்டின் ஆதிப்புள்ளி இது.