பேச்சு

கோவை கொடிசியா ஊக்கப்பரிசு

  அது 2014. ஜூலை மாதத் தொடக்கம். B.Sc இயற்பியல் இரண்டாமாண்டு வகுப்புகள் நடத்தத்தொடங்கிய காலம். நுண்கலைமன்ற பொறுப்பாளர் குமரேச மூர்த்தி ஐயா, தொடர்புகொண்டு ஒரு போட்டி வந்திருக்கு போகணும் என்றார்கள். முதலாமாண்டு பயின்றபோது நான் கல்லூரிக்காப் பெற்ற பரிசுகளின் மீதான நம்பிக்கை இந்த வாய்ப்பைத் தந்திருக்கும் என்று எண்ணினேன். குறிப்பாக, 2014ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவையொட்டி நிகழ்ந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான பேச்சுப்போட்டியில் திரு.வி.க கல்லூரியிலிருந்து சென்று முதலிடம் பெற்றது. UG முதலாமாண்டு மாணவர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடிப்பதெல்லாம் பெரிய விசயமென்று அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். அது அப்போது உண்மையும்கூட. திருவாரூர் செல்வீஸ் குளிர்மை அரங்கத்தில் நடக்கவுள்ள பேச்சுப் போட்டிக்கு, திரு.வி.க…